சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு | வினய்குமார் தலைமையில் விசாரணை நடத்த முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

237

சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக கூறப்படும் புகார் தொடர்பாக, ஓய்வு பெற்ற அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை நடத்த முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறையில் பல்வேறு சலுகைகளும், சிறப்பு வசதிகளும் அளிக்கப்படுவதாக புகார்கள் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில், சசிகலா அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹார சிறையில், சிறைத்துறை புதிய டி.ஐ.ஜி. ரூபா ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுப்பதற்கு 2 கோடி ரூபாய் வரை உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்றிருக்கலாம் என அவர் குற்றம்சாட்டி இருந்தார்.
இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்ட நிலையில், உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை நடைபெறும் என சித்தராமையா அறிவித்துள்ளார்.