கணவர் நடராஜன் இறுதி சடங்கில் கலந்துகொள்ள 15 நாள் பரோலில் சசிகலா வருகிறார்.

809

கணவர் நடராஜன் இறுதி சடங்கில் கலந்துகொள்ள 15 நாள் பரோலில் சசிகலா வருகிறார்.
கணவர் நடராஜனின் உடல்நிலை மோசமான நிலையில் இருந்தபோதே சசிகலா பரோலில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கணவர் உயிரிழந்துள்ளதால், பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் சசிகலா 15 நாட்கள் பரோல் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை, பரோல் மனுவில் சசிகலாவிடம் கையெழுத்து பெறவுள்ளதாகவும், பரோல் மனுவோடு நடராஜனின் இறப்பு சான்றிதழும் இணைத்து, பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் வழங்கப்படும் என சசிகலாவின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். பரோல் மனு கிடைத்தவுடன் பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் பரோல் வழங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறை விதிகளின் படி வழக்கமான உடல் பரிசோதனை மற்றும் சிறை நடைமுறைகளுக்கு பிறகு சசிகலா வெளியில் வருவார் என தெரியவந்துள்ளது. மேலும், பரோல் அனுமதி கிடைத்தவுடன், சசிகலா நேரடியாக தஞ்சாவூர் செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சசிகலாவுக்கு பத்து நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.