பழம்பெரும் நடிகர் சசிகபூர் மரணம், பாலிவுட் பிரபலங்கள் நேரில் அஞ்சலி!

668

பழம்பெரும் பிரபல பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான சசிகபூர், உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் மரணமடைந்ததை அடுத்து பாலிவுட் நடிகர்கள் அவரது உடலிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
கொல்கத்தாவில் பிறந்த சசிகபூர், தீவார், நமக் அலால் உள்ளிட்ட இந்தி திரைப்படங்களில் நடித்து, பெரும்புகழைப் பெற்றவர். இந்நிலையில் அவர் தனது 79வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் மரணமடைந்தார். அவரது மறைவை அடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் , பிரதமர் மோடி ஆகியோர் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ராணி முகர்ஜி ,ரன்பீர் கபூர் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் சசிகபூரின் உடலிற்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர் கமல்ஹாசனும் சசிகபூரின் மரணத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் . இதனைய<shashikapoor-death02>டுத்து சசிகபூரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.