சசிகலாவின் கோரிக்கையை நீதிபதி ஆறுமுசாமி விசாரணை ஆணையம் நிராகரித்துள்ளது..!

566

ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தில் சசிகலாவின் கோரிக்கையை நீதிபதி ஆறுமுசாமி விசாரணை ஆணையம் நிராகரித்துள்ளது.நீதிபதி ஆறுமுசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள், அப்போலோ மருத்துவர்கள், ஜெ.தீபா, கிருஷ்ணபிரியா, பூங்குன்றன் உள்ளிட்டோரிடம் ஆறுமுசாமி இதுவரை விசாரணை நடத்தியுள்ளார். இதனிடையே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 நாட்களில் விளக்கம் அளிக்கக்கோரி சசிகலாவுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. இதையடுத்து, அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்திய பின்னரே தன்னிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்று சசிகலா கேட்டுக்கொண்டார். தன் மீது குற்றம்சாட்டியவர்களின் பட்டியலை வழங்குமாறும் சசிகலா தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தநிலையில், சசிகலாவின் கோரிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நிராகரித்துள்ளது. இதன்படி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் விரைவில் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.