சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றதைக் கண்டித்து மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் பரவியதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

557

சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றதைக் கண்டித்து மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் பரவியதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி நேற்று முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுப் புரட்சியைப் போல் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து மெரீனா கடற்கரையில் பெருமளவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் போராட்டம் நடக்கப் போவதாக பரவிய செய்தி எதிரொலியால் போலீசார் குவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடற்கரை முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.