சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூருக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன்..!

192

மனைவி சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூருக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

காங்கிரஸ் எம்.பி சசிதரூரின் 3வது மனைவி சுனந்தா புஷ்கர் 2014-ம் ஆண்டு டெல்லியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி அறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இது குறித்து விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழுவினர் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மீது மனைவியை கொடுமைப்படுத்தியது, தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து, சசிதரூர் மீது தனிக்கோர்ட்டில் சிறப்பு புலனாய்வு குழுவினர் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். சசிதரூர் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதை அடுத்து அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜரானா சசிதரூருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.