சத்துணவு திட்டத்தில் முட்டையை தொடர்ந்து வழங்குவதில் பாதிப்பு-அமைச்சர் சரோஜா!

366

சத்துணவு முட்டை விவகாரம் குறித்து, அமைச்சர் சரோஜாவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
வட மாநிலங்களில் முட்டை கொள்முதல் அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்தில் முட்டை விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. எனவே, சத்துணவுக்கு முட்டை கொள்முதல் நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில், சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சத்துணவு திட்டத்தில் முட்டையை தொடர்ந்து வழங்குவது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.