நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 62வது படத்திற்கு சர்கார் என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் நேற்று மாலை வெளியானது. இதையடுத்து, விஜய்யின் 44வது பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு இரண்டாவது லுக் வெளியிடப்பட்டது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கும் சர்கார் படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.