சர்கார் வெற்றி விழா : முதல் நான்கு நாள்களில் ரூ.150 கோடிக்கும் அதிகமான வசூல்

141

சர்கார் திரைப்பட வெற்றி விழாவின்போது, கேக்கில் மிக்சி கிரைண்டர் உருவம் வைத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதன் நினைவாக கொண்டாடப்பட்டது.

விஜய் நடித்து சமீபத்தில் வெளியான சர்கார் படம் முதல் நான்கு நாள்களில் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளது. இந்நிலையில் சர்கார் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நேற்று கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது. நடிகர் விஜய், ஏ.ஆர். முருகதாஸ், ஏ.ஆர். ரஹ்மான், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்ட படக்குழுவினர் இதில் கலந்துகொண்டார்கள்.

இந்தக் கொண்டாட்டத்தில் வித்தியாசமான கேக் ஒன்று வெட்டப்பட்டது. அதில், சர்கார் படத்திலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட காட்சியை நினைவுபடுத்தும்வகையில் மிக்ஸி, கிரைண்டர் ஆகிய மாதிரிகள் கேக்கில் இடம்பெற்றிருந்தன.