மறைந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் இறுதிச்சடங்கு இன்று மாலை காசிமேட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

230

மறைந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் இறுதிச்சடங்கு இன்று மாலை காசிமேட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சரான சற்குண பாண்டியன், அந்தக் கட்சியின் துணைப்பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். திமுக சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியிலிருந்தது 1989 மற்றும் 1996 ஆண்டு தேர்தலில் சட்டப் பேரவைக்கு சற்குண பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996ம் ஆண்டு தேர்தலுக்கு பிற்கு சமூகநலத்துறை அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார். 2006 தேர்தல் தோல்விக்கு பிறகு தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவராக பொறுப்பு வகித்தார்.
உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை இரண்டரை மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணியளவில் காசிமேடு மின்மயானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.