வங்காளதேசம் வெற்றி பெற கூடாது என்று முன்கூட்டியே திட்டமிடப்பட்டது | பாகிஸ்தானின் குற்றச்சாட்டால் சர்ச்சை !

975

சாம்பியன்ஸ் ட்ராபி இறுதி போட்டிக்கான அணிகள் குறித்து மேட்ச் பிக்சிங் நடைபெற்று உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அமர் சோகைல் குற்றம்சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வெளிப்புற நபர்களால் சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கான அணிகள் குறித்து பிக்சிங் நடைபெற்று உள்ளதாக அமர் சோகைல் குற்றம்சாட்டி உள்ளார். வங்காளதேசம் வெற்றி பெற கூடாது என்று திட்டமிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரருமான அதுல் வாசன் கூறும் போது அமீர் சோகைலின் கூற்றை முழுமையாக ஏற்க முடியாவிட்டாலும், பாகிஸ்தானின் வரலாற்றை பார்க்கும் போது, இதனை முற்றிலும் நிராகரித்து விட முடியாது என கூறினார்.
முகமது அமிர், முகமது ஆசிப் மற்றும் சல்மான் பட் ஆகிய பாகிஸ்தான் வீரர்கள் 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் சுற்றுப்பயணத்தின் போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது குறிப்பிட தக்கது