கொடூர செயலில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை !

75

பொள்ளாச்சி கொடூர செயலில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கினால் மட்டுமே, இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தீர்வாக அமையும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னை கொடுங்கையூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தலில், சமத்துவ மக்கள் கட்சியின் நிலைபாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.