நடிகர் சங்க உறுப்பினர் பதிவியிலிருந்து நிரந்தரமாக நீக்கி இருப்பது ஏற்க முடியாது என்றும், சட்டத்தின் வாயிலாக நீதிமன்றத்தை அணுகுவோம் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

240

நடிகர் சங்க உறுப்பினர் பதிவியிலிருந்து நிரந்தரமாக நீக்கி இருப்பது ஏற்க முடியாது என்றும், சட்டத்தின் வாயிலாக நீதிமன்றத்தை அணுகுவோம் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் விதிகளின் படி நடைபெற்றதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கூட்டத்தின் வாயிலாக தங்களை நடிகர் சங்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்கி இருப்பது ஏற்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீக்கியது தொடர்பாக தங்களது உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் பகிர்ந்து கொண்ட ரசிகர்களுக்கும், இயக்கத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறிய சரத்குமார்,
நடிகர் சங்கத்தின் தன்னிச்சையான முடிவுக்கு சட்டத்தின் வாயிலாக நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் எந்த ஒரு பதட்டமும் கொள்ளாமல் அமைதியாக இருக்கும்படி தமது அறிக்கையில் நடிகர் சரத்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.