விஜயகாந்த் விரும்பினால், தேமுதிக-வுடுன் கூட்டணி அமைக்க தயார் – சரத்குமார்

256

விஜயகாந்த் விரும்பினால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக-வுடன் கூட்டணி அமைக்க தயார் என சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி அடுத்த கனகம்மா சத்திரத்தில், சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சிக்கொடியை ஏற்றி வைத்தபின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஊழலற்ற நேர்மையான ஆட்சி அமைய மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில், விஜயகாந்த் விரும்பினால், தேமுதிக-வுடன் கூட்டணி அமைக்க தயார் என்றும் சரத்குமார் கூறினார்.