குகைக்குள் அமர்ந்து பிரதமர் அடைந்த பயன் என்ன? – மோடிக்கு சரத் யாதவ் கேள்வி

155

நாடாளுமன்றத்தை பக்திப் பாடல் பாடும் மன்றமாக மாற்ற விரும்புகிறீர்களா எனப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சரத்யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரக்கண்ட் மாநிலத்தில் இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் குகையில் பிரதமர் 17மணி நேரம் தியானம் மேற்கொண்டார். கேதார்நாத், பத்ரிநாத் கோவில்களில் 2 நாட்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சரத் யாதவ், நாடாளுமன்றத்தைப் பக்திப்பாடல் பாடும் மன்றமாக மாற்றப் பிரதமர் விரும்புகிறாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் ஒரு குகைக்குள் 15மணி நேரத்துக்கு மேல் அமர்ந்து அடைந்த பயன் என்ன எனவும், ஏதேனும் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.