சரத்யாதவ் மற்றும் அலி அன்வர் ஆகிய மாநிலங்களவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம்!

756

சரத்யாதவ் மற்றும் அலி அன்வர் ஆகியோரை மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான சரத்யாதவ் மற்றும் அலி அன்வர் அன்சாரி ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அக்கட்சியின் லோக்சபா தலைவர் ஆர்.சி.பி.சிங் துணை ஜனாதிபதியிடம் முறையிட்டார். இதனையடுத்து சரத்யாதவ் மற்றும் அலி அன்வர் அன்சாரி ஆகியோரை தகுதி நீக்கம் செய்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 10ன் கீழ் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மாநிலங்களவைச் செயலர் விளக்கம் அளித்துள்ளார்.