கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – சரத்குமார்

323

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பதே தங்கள் கட்சியின் விருப்பம் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சியின் 12ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அக்கட்சி அலுவலகத்தில் சரத்குமார் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். இதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 27 வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். விஷால் இளைய தலைமுறையினர் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்றும் தெரிவித்தார்.