மக்கள் சேவை செய்யவே சாரணர்-சாரணியர் இயக்க தலைவர் பதவிக்கு போட்டி-எச். ராஜா !

305

மக்கள் சேவை செய்வதற்காகதான் சாரணர் சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக பாஜக தேசியச் செயலர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை எச்.ராஜா நேரில் சந்தித்து பேசினார். தனது மணி விழாவிற்கு வருகை தருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, ஸ்டாலினுடனான அரசியல் இல்லை என விளக்கம் அளித்தார். கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்ததாக கூறிய அவர், மக்கள் சேவை செய்யவே சாரணர் சாரணியர் இயக்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக தெரிவித்தார்.