வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்ற முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை, காவலர் ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் .

221

கர்நாடகாவில் வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்ற முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை, காவலர் ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நிலவி வரும் பணத்தட்டுப்பாடு காரணமாக வங்கிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் பணம் எடுப்பதற்காக கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு வங்கியின் வாசலில் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். வங்கியை அதிகாரிகள் திறந்தபோது, ஒருவருக்கொருவர் முன்டிஅடித்துக் கொண்டு உள்ளே நுழைய முற்பட்டதால், தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது வரிசையில் நின்று கொண்டிருந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பொருமை இழந்த காவலர் சற்றும் தாமதிக்காமல் அவரை சரமாரியாக தாக்கினார். பொதுமக்கள் யாரும் அதனை தடுக்க முன்வரவில்லை. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.