தொடர் கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சப்பாணிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவர் மனநோயாளி இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

406

தொடர் கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சப்பாணிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவர் மனநோயாளி இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
திருச்சியை அடுத்த திருவெறும்பூரை சேர்ந்த சப்பாணி, தனது தந்தை தேக்கன்உட்பட 8 பேரை கொலை செய்து புதைத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறைத்துறை அதிகாரிகள் தனிமைச் சிறையில் அடைத்து துன்புறுத்துவதாக சப்பாணி புகார் அளித்தார். இதையடுத்து, கடந்த மாதம் 17ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் மனநல பரிசோதனைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவில், சப்பாணி மனநிலை பாதிக்கப்படவில்லை என சான்றளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சப்பாணியை மீண்டும் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.