நீதிமன்ற ஊழியர் வீட்டில் 100 பவுன் கொள்ளை | மர்மநபர்களுக்கு காவல்துறை வலைவீச்சு

199

சங்கரன்கோவில் அருகே நீதிமன்ற ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நீதிமன்ற ஊழியராக பணியாற்றி வருபவர் வேலுச்சாமி.
வார விடுமுறையை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் அவர் சுற்றுலா சென்றிருந்தார். இந்நிலையில், இன்று காலை வீடு திரும்பிய அவருக்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோவில் இருந்த 100 பவுன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேரிகரித்தனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.