காஞ்சி ஜெயேந்திரர் உடல் நாளை காஞ்சி சங்கர மட வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட உள்ளது..!

610

காஞ்சி ஜெயேந்திரர் உடல் நாளை காஞ்சி சங்கர மட வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
காஞ்சி சங்கரமட பீடாதிபதியான ஜெயேந்திரருக்கு, இன்று அதிகாலை தீடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சங்கர மடத்துக்கு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டாா். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ஜெயேந்திரர் உயிரிழந்தார். காஞ்சி சங்கர மடத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரர் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த ஜெயேந்திரரின் உடல் நாளை காஞ்சி சங்கர மட வளாகத்திலேயே அடக்கம் செய்யப்படுகிறது. காஞ்சி ஜெயேந்திரர் உயிரிழந்ததை தொடர்ந்து காமாட்சியம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது. இதனிடையே சங்காராச்சாரியர் உடலுக்கு நந்தனார் பேரவை நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.