செம்மரக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட விமானப் பணிப்பெண் சங்கீதா, ஆந்திர சிறையில் தற்கொலை!

707

செம்மரக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட விமானப் பணிப்பெண் சங்கீதா, ஆந்திர சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.
ஆந்திர மாநிலத்தில் செம்மர கடத்தலில் ஈடுபட்ட வழக்கில் கொல்கத்தாவை சேர்ந்த விமான பணிப்பெண் சங்கீதா சாட்டர்ஜி கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். சித்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர், பல முறை ஜாமீன் கோரி விண்ணப்பித்தார். ஆனால் ஜாமீன் கிடைக்காததால், மன உளைச்சலில் இருந்த சங்கீதா, தற்கொலை செய்து கொண்டார். கழிவறையை சுத்தம் செய்ய வைக்கப்பட்டு இருந்த ஆசிட்டை குடித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.