சித்தூர் சிறையில் உள்ள தமிழர்கள் 32 பேரை விடுவிக்க முடியாது என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

246

சித்தூர் சிறையில் உள்ள தமிழர்கள் 32 பேரை விடுவிக்க முடியாது என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பல்வேறு நலத்திட்டப்பணிகளை துவக்கி வைக்க சித்தூர் மாவட்டத்தில் சந்திர பாபு நாயுடு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். குப்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சித்தூர் சிறையில் உள்ள 32 தமிழர்களை விடுதலை செய்ய முடியாது என்று கூறினார்.
ஆந்திராவில் விலை மதிப்புமிக்க செம்மரங்கள் தொடர்ந்து வெட்டி கடத்தப்படுவதாக கூறிய சந்திரபாபு நாயுடு, இதை அனுமதிக்க முடியாது என்றார். செம்மரம் வெட்டி கடத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார். 32 பேரை விடுவிக்க தமிழக அரசு நீதிமன்றத்தை நாடினால், ஆந்திர அரசு உரிய விளக்கம் அளிக்கும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.