பெரியகுளத்தில் உள்ள மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் உள்ள சந்தன மரத்தை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர்.

301

பெரியகுளத்தில் உள்ள மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் உள்ள சந்தன மரத்தை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ளது மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில். நூறாண்டு பழமை வாய்ந்த இந்த கோவிலில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக நிதியமைச்சரின் தந்தை பெயரில் 5 சந்தன மரங்கள் நடப்பட்டன. இதில் 4 மரங்கள் பட்டுப்போய் விட்ட நிலையில், ஒரு மரம் மட்டும் செழிப்பாக வளர்ந்திருந்தது. இந்த நிலையில் இரவு 10 மணியளவில் கோவிலைபூட்டி விட்டு, காவலாளிகள் வனராஜ் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் கோவிலிக்குள் உறங்கியுதாக கூறப்படுகிறது. இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள், மின்சாரத்தை துண்டித்து, கோவிலில் இருந்த சந்தன மரத்தை வெட்டிச் சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.