திமுகவை வழிநடத்த மு.க.அழகிரிக்கு தகுதியில்லை – பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி

283

திமுகவை தலைமை தாங்கி வழிநடத்த மு.க.அழகிரிக்கு தகுதியில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்துக்களுடன் சேர்ந்து பாஜக தேர்தல் பிரச்சாரம் செய்தால் தான் தமிழகத்தில் வெற்றி பெற முடியும் என்றார். நடிகர்கள் ரஜினி, கமல் பின்னால் சென்றால் பாஜக தோல்வியை சந்திக்கும் என்றும் சுப்பிரமணியசாமி தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், ஸ்டாலின் தான் திமுகவை தலைமை தாங்கி வழி நடத்த போகிறார் என்று அக்கட்சியினர் முடிவு செய்துள்ளனர் என்றும், ஆனால் மு.க.அழகிரி கட்சி தலைமை தாங்க சரிபட்டு வரமாட்டார் எனவும் சுப்பிரமணிய சாமி விமர்சித்துள்ளார்.