வங்கி கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு

217

சமயபுரம் வங்கிக்கொள்ளை சம்பவத்தில் முகமூடி கொள்ளையர்களை பிடிக்க, முதல்முறையாக டிஜிட்டல் மேப்பிங் முறையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி அருகே சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கிச் சுவரை துளையிட்டு, 500க்கும் மேற்பட்ட சவரன் தங்க நகைகள், 19 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 3 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட எஸ்பி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கொள்ளைச் சம்பவத்தில், வங்கியில் உள்ள 5 லாக்கர்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.மேலும் விசாரணையில் கொள்ளையர்களின் கையில் வங்கியின் ப்ளூ பிரிண்ட் இருந்திருப்பதும் தெரிய வந்துள்ளது, இதனால் வங்கி ஊழியர்கள் துணையுடன் தான் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியிருக்க வேண்டும் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர, திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக டிஜிட்டல் மேப்பிங் என்ற முறையில் இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.