யானைக்கு திடீர் மதம் பிடித்தால் பக்தர்கள் அலறி ஓட்டம்

451

திருச்சி சமயபுரம் கோயில் யானை மிதித்து பாகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரசித்திப் பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மசினி என்ற 9 வயது பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை கஜேந்திரன் என்ற பாகன் கவனித்து வந்தார். இந்தநிலையில், வழக்கம்போல் பக்தர்களுக்கு யானை மசினி ஆசி வழங்கியுள்ளது. அப்போது மசினிக்கு தீடீரென மதம் பிடித்து, பாகனை மிதித்துள்ளது. இதில், படுகாயம் அடைந்த பாகன் கஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக் கண்ட பக்தர்கள் அலறியடித்து ஓடினர்.

யானை விரட்டியதில் 8 பேர் காயம் அடைந்தனர். யானைக்கு மயக்க ஊசி செலுத்தி மருத்துவர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். உயிரிழந்த யானை பாகனின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோயில் மூடப்பட்டுள்ளது.