உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்த முயற்சிக்கவில்லை. பகுஜன் சமாஜ், பாஜக பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.

231

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி உட்பட எந்தக் கட்சியுடனும் கூட்டணியை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளவில்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக ஆகியவை உத்தரபிரதேசத்தில் மாநில வளர்ச்சி பற்றி பேசாமல் பிரிவினைவாத அரசியலில் ஈடுபட்டுவருவதாக குற்றஞ்சாட்டினார். அப்போது, உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவை நல்ல மனிதர் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வர்ணித்தது பற்றிய செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த சுர்ஜேவாலா, ராகுல் காந்திக்கு எந்த அரசியல் தலைவருடனும் தனிப்பட்ட வகையில் பகையில்லை, ஆனால் அரசியல் என்பது தனிநபரின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.