மான் வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான்கானை விடுதலை செய்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

227

மான் வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான்கானை விடுதலை செய்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 1998 ஆம் ஆண்டு அரிய வகை மான்களை வேட்டையாடியதாக நடிகர் சல்மான்கான் மீது 2 வழக்குகள் தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு சல்மான்கானுக்கு ஓராண்டு மற்றும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஜஸ்தான் கீழ்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து 2007 ஆம் ஆண்டு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் சல்மான்கான் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் கீழ்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தது. இதனால் சல்மான்கான் 2 வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.