சேலம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை லட்சம் மதிப்பிலான மதுபானங்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்து…

227

சேலம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை லட்சம் மதிப்பிலான மதுபானங்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் வீட்டில் பதுக்கி வைத்து மதுபானங்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், தீவிர சோதனை நடத்தினர். அப்போது, மாது என்பவரது வீட்டில் பதுக்கி வைத்து மதுபானம் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பிலான மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், மது விற்பனையில் ஈடுபட்ட மாது மற்றும் அவரது தம்பி சுப்பிரமணியன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.