சேலத்தில் நகைச்சுவை நடிகரிடம் மர்மநபர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

815

சேலத்தில் நகைச்சுவை நடிகரிடம் மர்மநபர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஐயப்பன்தாங்கலில் வசித்து வருபவர் நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி. இவர் ஈரோட்டில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு, சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சேலத்தில் ஒரு ஆட்டோவில் ஏறி பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தபோது, ஆட்டோவை பாதி வழியில் நிறுத்தி நடிகர் கொட்டாச்சியிடம் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அவரது நண்பர்கள் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். நகை, பணம், செல்போன் போன்ற பொருட்களை பிடுங்கிக் கொண்டு ஆட்டோவில் இருந்து அவரை சாலையில் வீசி விட்டு தப்பியோடி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.