சேலம் மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது – ஜெ.தீபா கண்டனம்..!

269

விவசாயிகளுக்காக போராடிய சேலம் மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு ஜெ.தீபா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கதிராமங்கலத்தில் போராடிய மாணவி, பேராசிரியர் மற்றும் கிராம மக்கள் மீது கிரிமினல் வழக்குகளை பதிவு செய்திருப்பது வேதனைக்குரியது என கூறியுள்ளார்.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாணவி வளர்மதி, திருமுருகன் காந்தி உட்பட அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனே விடுதலை செய்திட வேண்டும் என ஜெ.தீபா வலியுறுத்தியுள்ளார்.
தமிழின விரோதப்போக்கை கையாண்டால் மக்கள் சக்தியையும் அனைத்துக்கட்சியையும் திரட்டி, தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் வெடிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.