சேலத்தில் திரைப்பட சங்கத்தினர் நடத்திய சோதனையில் புதுப்பட திருட்டு டி.வி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

271

சேலத்தில் திரைப்பட சங்கத்தினர் நடத்திய சோதனையில் புதுப்பட திருட்டு டி.வி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம் மாநகரில் உள்ள கடைகளில் தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தினர் சோதனை நடத்தினர். இதில் சமீபத்தில் வெளியான துப்பறிவாளன், மகளிர்மட்டும் உள்ளிட்ட புதுப்பட திருட்டு டிவிடிகள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதுப்பட திருட்டு டிவிடிகளை பறிமுதல் செய்த நடிகர் சங்கத்தினர், அவற்றை விற்பனை செய்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.