எடப்பாடி அருகே அரசுக்கு சொந்தமான கல்குவாரியில் இளைஞரின் சடலம் | தற்கொலையா? கொலையா?

306

எடப்பாடி அருகே அரசுக்கு சொந்தமான கல்குவாரி குட்டையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள தமிழக அரசுக்கு சொந்தமான கல்குவாரியில் ஆண் சடலம் மிதப்பமாக அப்பகுதி மக்கள் போலீசுக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் மார்பக பகுதியில் காயம் இருப்பதால், தானாக விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து விட்டு குட்டை தண்ணீரில் வீசிச் சென்றுள்ளரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.