மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டி-சேலம்..!

101

சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டியில் 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று, தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்…

சேலத்தில் மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்… எடை அடிப்படையில் ஆண், பெண் இருவருக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன… இந்நிகழ்வின் போது வீரர், வீராங்கனைகளின் திறமைகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.. போட்டியின் நிறைவில் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்..