குடிநீர் குழாயில் உடைப்பு : பல ஆயிரம் லிட்டர் குடிநீர் கழிவு நீர் கால்வாயில் கலக்கும் அவலம்

283

சேலம் அருகே ராசிபுரம் கூட்டுக் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக கழிவு நீர் கால்வாயில் கலப்பது அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து ராசிபுரத்திற்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், எடப்பாடி கேட்டுக்கடை அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாகி கழிவு நீர் கால்வாயில் சென்று சேருகிறது. கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இவ்வாறு குடிநீர் வீணாவது அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது. அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.