ஆண் வாக்காளர் அடையாள அட்டையில் பெண் படம்.

264

சேலத்தில் இளைஞர் ஒருவருக்கு வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையில் பெண்ணின் புகைப்படம் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாக அரசின் ஸ்மார்ட் கார்டில் நடிகையின் படம், சாமி படம் என சம்மந்தமில்லாத படங்கள் வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சேலம் சின்ன திருப்பதி, அண்ணா நகரைச் சேர்ந்த அமீனுதீன் என்பவருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையில் அவரது புகைப்படத்திற்கு பதிலாக, பெண் ஒருவரின் புகைப்படம் இருந்துள்ளது. இதனால் அவர் மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்.