கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுக்கு ஆதரவு – வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா

126

வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் ஆதரவு அளிப்போம் என வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உணவு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும், ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.