19 சவரன் தங்க நகைகள் கொள்ளை | அரசு மருத்துவர் வீட்டில் கைவரிசை

234

சேலத்தில் அரசு மருத்துவரின் வீட்டில் இருந்து 19 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் காந்திசாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இளங்கோ, அங்குள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர், 19 சவரன் தங்க நகைகளை அள்ளிச்சென்றுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மருத்துவர் வீட்டில் கைவரிசை காட்டிய மர்மநபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.