வீட்டின் கதவை உடைத்து கொள்ளை | கைரேகை நிபுணர்களை வரவழைத்து போலீஸ் விசாரணை

122

சேலம் அருகே வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகை மற்றும் 37 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் சரவணன்.இவரது மாமனார் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றிருந்தார். இந்நிலையில் சரவணன் வீட்டிற்கு வந்து பார்த்த போது, கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் நகை மற்றும் 37 ஆயிரம் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து சரவணன் போலீசில் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கைரேகை நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.