சேலம் நகைக்கடையில் 100 சவரன் நகை கொள்ளை |காவல்துறையினர் தீவிர விசாரணை..!

502

சேலம் அருகே நகைக்கடையின் மேற்கூரையை பிரித்து 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். நகைக்கடை அதிபரான இவர் கடையை பூட்டி விட்டு மதிய உணவு சாப்பிட வீட்டிற்கு சென்றார். அப்போது தகரத்திலான கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே சென்ற திருடர்கள், கடையில் இருந்த 100 சவரன் நகை மற்றும் இரண்டு லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.