திருமணமாகாத விரக்தியால் கட்டிட தொழிலாளி தற்கொலை

458

சேலம் அருகே திருமணமாகாத விரக்தியால் கட்டிட தொழிலாளி போதையில் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சந்தைதானம்பட்டியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி சந்திரசேகரன்.தந்தையை இழந்த அவர் தாயார் சித்ரா பராமரிப்பில் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகாத விரக்தியில் மதுபோதைக்கு அடிமையானார்.இதனால் விரக்தியடைந்த சந்திரசேகரன் போதையில் காவிரியாற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இத்தகவல் அறிந்த மேட்டூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.