சேலம் அருகே ரயில் தண்டவாளத்தில் கான்கிரீட் கற்கள் கிடந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

195

சேலம் – தருமபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் ரயில் மேம்பாலம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் திருநெல்வேலி – மும்பை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, 10க்கும் மேற்பட்ட கான்கிரீட் சிலாப் கற்கள் தண்டவாளத்தில் கிடப்பதை கண்டு ஓட்டுநர் ரயிலை நிறுத்தினர். இருப்பினும் ரயில் ஏறியதில் சில கான்கிரீட் கற்கள் நொறுங்கின. இது குறித்த தகவலின்பேரில், சேலம் சரக டிஐஜி நாகராஜன், எஸ்.பி. ராஜன் மற்றம் கோவை ரயில்வே டி.எஸ்.பி. குமரேசன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, கான்கிரீட் கற்களை அப்புறப்படுத்தினர். ரயிலை கவிழ்க்க செய்த சதியா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.