பாலியல் புகார் ஆசிரியருக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்..!

132

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே, பாலியல் புகாருக்கு உள்ளான ஆசிரியர் ஒருவர் அரசு பள்ளிக்கு பணிமாறுதல் பெற்று வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எடப்பாடி வட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ள தேவனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 2 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலிப் பணியிடங்களில் ஒன்றுக்கு எட்டுக்குட்டை மேடு அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவரும் உதயன் என்பவர் பணிமாறுதல் பெற்று வரவிருப்பதாக தகவல் பரவியது. இவர்மீது ஏராளமான பாலியல் புகார் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் அவர் இந்தப்பள்ளிக்கு வரக்கூடாது என சேவனூர் பகுதிமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.