சேலம் அருகே பிரபல ரவுடி கொடூர கொலையில், பழிக்கு பழி வாங்கப்பட்டரா என்று கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

188

சேலம் அருகே பிரபல ரவுடி கொடூர கொலையில், பழிக்கு பழி வாங்கப்பட்டரா என்று கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அயோத்திபட்டினம், ராமர் கோவில் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி முருகன், நேற்று இரவு தனது நண்பர்களுடன் வெளியில் சென்றுவிட்டு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லை. இதனையடுத்து, காவல் துறையில் அவரது உறவினர்கள் புகார் தெரிவித்த நிலையில், தாதனூர் பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் முருகன் சடலத்தை கைப்பற்றினர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில், முருகனின் நண்பர்கள், மதன், பன்னீர்செல்வம், முருகன் ஆகிய 4 பேரும் மது அருந்தி கொண்டிருந்தபோது இவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முருகன் கொடூரமாக கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. 1996ம் ஆண்டு நடைப்பெற்ற கொலைக் காரணமாக, முருகன் பழி வாங்கப்பட்டாரா என்று கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.