சேலம் மாநகராட்சி சார்பில் போகிப் பண்டிகையை கொண்டாடும் வகையில் பக்கெட் சேலஞ் திட்டம் அறிமுகம்..!

340

சேலம் மாநகராட்சி சார்பில் புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாடும் வகையில் பக்கெட் challenge நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
போகிப் பண்டிகையில் பொதுமக்கள் தேவையற்ற பொருட்களை எரிப்பது வழக்கம். இதனால் சுற்றுச்சூழல் மாசுபட்டு, பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனைக் கட்டுப் படுத்தும் விதமாக, சேலம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பக்கெட் சேலஞ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாநகராட்சி ஆணையர் சதீஷ், சேலஞ்சை அறிமுகப்படுத்தினார். இதில், போகி பக்கெட் என்று ஒரு பக்கெட் வைக்கப்படும். வீட்டில் தேவையற்ற உடைகள் மற்றும் பொருட்களை எரிக்காமல், இந்த பக்கெட்டில் கொண்டு வந்து போட வேண்டும். அவ்வாறு போடப்படும் பொருட்கள் இல்லாதவர்களுக்கும், தேவை உள்ளவர்களுக்கு கொடுத்து உதவப்படும். இதுவே பக்கெட் சேலஞ் எனப்படுகிறது. சிறப்பான இந்த திட்டத்தை ஆணையர் சதீஷ் மாணவர்களிடையே எடுத்துரைத்தார்.