அப்ரமேயர் பெருமாள் கோயில் திருத்தேரோட்ட நிகழ்ச்சி..!

118

ஓமலூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ளது தொளசம்பட்டி. இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற அப்ரமேயர் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் திருத்தேரோட்ட துவக்க நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் திருத்தேரோட்ட நிகழ்ச்சி 3 நாட்கள் நடைபெறும். முதல் நாள் தேர் நிலையில் இருந்து சிறிது தூரம் இழுத்து சென்று நிறுத்தப்பட்டது. நாளை மாலை நிலைநிறுத்தப்பட்ட இடத்திலிருந்து தேர் இழுக்கப்பட்டு குறிப்பிட்ட தூரத்தில் நிறுத்தப்படும். பின்னர் 3வது நாளாக அத்தேர் வழக்கமான இடத்தில் நிலைநிறுத்தப்படும். இந்த திருத்தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.