மலைவாழ் மக்கள் பயன்படுத்தும் நிலத்தினை வேறு நபர்களுக்கு வழங்க எதிர்ப்பு.

1895

ஆத்தூர் அருகே பொதுபயன்பாட்டிற்கான நிலத்தினை வேறு நபர்களுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பைத்தூர் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். பொதுப் பயன்பாட்டிற்காக உள்ள அரசு நிலத்தை வேறு நபர்களுக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைவாழ் மக்கள் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.