காவிரி ஆற்றில் ஆடிபெருக்கை முன்னிட்டு பக்தர்கள் புனித நீராடியபோது, கல்லூரி மாணவி ஒருவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

238

காவிரி ஆற்றில் ஆடிபெருக்கை முன்னிட்டு பக்தர்கள் புனித நீராடியபோது, கல்லூரி மாணவி ஒருவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி ஆற்றில் பல ஆயிரகணக்கான பக்தர்கள் புனித நீராடினர். கோனேரிப்பட்டி, கல்வடங்கம் காவிரி ஆற்றிலும் ஏராளமானோர் புனித நீராடி மகிழ்ந்தனர். அப்போது, கோனோிப்பட்டி கதவணை மின்நிலைய நீர்த்தேக்கத்தில் நீராடுவதற்காக, சேலத்தில் இருந்து குடும்பத்தினருடன் வந்திருந்த கல்லூரி மாணவி பிரியா பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதேபோல், பூலாம்பட்டியில் பள்ளி மாணவன் ஒருவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டபோது தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஆடிப்பெருக்கு என்பது ஒருபக்கம் மகிழ்ச்சியை கொடுத்தாலும், இதுபோன்ற சோக நிகழ்வுகள் இந்த மகிழ்ச்சியை ஆற்றின் வேகத்தோடு அடித்து சென்று விடுகிறது.